ஐகாரக்குறுக்கம் | Ikarakurukkam |
ஐகாரக்குறுக்கம்
1. ஐகாரம் “ஜூ என்று தன் பெயர் கூறுமளவிற் குறுகாது, முற்றியல் ஜகாரமாம். ஆனால் சொற்களில் முதலெழுத்தாகவோ நடு எழுத்தாகவோ, இறுதி எழுத்தாகவோ, இது வரும்பொழுதோ, தனக்குரிய இரு மாத்திரைகளில் குறைந்து ஒரு மாத்திரைப் பொழுதுள் ஒலிக்கப்பட்டு விடுகிறது. இதனால் இது ஐகாரக் குறுக்கமாகிறது. ஐப்பசி, தைப்பொங்கல் - இவை போன்றவை மொழிமுதற் குற்றைகாரங்கள். வலைஞன், மடையன் மொழிநடு ஐகாரக் குறுக்கங்கள். தவணை, துவரை, திருக்கை மொழியீற்றுக் குற்றை காரங்கள்.
