அட்டை பழமொழிகள் | attai Tamil Proverbs |
அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம்,
அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள்.
அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம்,
அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல, |
அட்டமத்துச் சனி. நட்டம் வரச் செய்யும்
அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது.
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல,
அட்டாதுட்டிக் கொள்ளித் தேள்,
அட்டாரைத் தொடாக் காலம் இல்லை.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது.
அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு,
அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காண லாம் கண்டியிலே.
அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்?
அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை, _-
அட்டை மாதிரி உறிஞ்சுகிறான்.
அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான்.
அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே.
அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல.
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும்.
அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம்
அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே.
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல,