அதிசயம் பழமொழிகள் | athisiyam Tamil Proverbs |
அதிசயம் பழமொழிகள்
அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது.
அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது,
அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது.
அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம்.
அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம்.
அதிசயமான ரம்பை; அரிசி கொட்டுகிற தொம்பை.