அதிகாரி பழமொழிகள் | athigaari Tamil Proverbs |
அதிகாரி பழமொழிகள்
அதிகாரம் இல்லாத. செல்களும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு?
அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்.
அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா?
அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது;
அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; லேலைக்காரன் குசு விட்டால் தலையை வெட்டு.
அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா?
அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம்.
அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு.
அதிகாரி வீட்டில் திருடித் லவன் வீட்டில் வைத்தது போல,
அதிகாரி வீட்டுக் கோழி முட்டை க்ப் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும்.