அடக்கம் பழமொழிகள் | atakkam Tamil Proverbs |
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்?
அடக்கம் ஆயிரம் பொன் பெறும்.
அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார்.
அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை.
அடக்கமே பெண்ணுக்கு அழகு;
அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான்.
அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.
அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல,
அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண்.
அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு; நமக்கும் பொல்லாப்பு.
அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கப் அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்.
அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும்,
அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி.
அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக் கலாகாது.
அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே!.
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?
அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார்.
அடர உழு; அகல விதை.
அடர விதைத்து ஆழ உழு.
அட ராவணா என்றானாம்.
அடா என்பவன் வெளியே புறப்பட்டான்.
அடாது செய்தவர் படாது படுவர்.
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்.