அந்தி பழமொழிகள் | anthi Tamil Proverbs |
அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி,
அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.
அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான் .
அந்திச் சிவப்பு அடை மழைக்கு அடையாளம்.
அந்திச் செவ்வானம் அப்போதே மழை.
அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை.
அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே,
அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச். செவ்வானம் மேற்கு.
அந்திச் சோறு உத்திக்கு ஒட்டாது,
அந்திப்பீ, சந்திப்பீ பணதான் வாழ்க்கை சாமப்பீ தட்டி எழுப்பும்
அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் வீடா.
அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா,
அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல. அத்து ஊதும் நெல் ஆகேோன்.
அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான்.
அந்நாழி அரிசி, முந்நாழிப் பருப்பு, இருநாழி நெய்.
அந்நிய மாதர் அவதிக்கு உதவார்.