அந்த பழமொழிகள் | antha Tamil Proverbs |
அந்த பழமொழிகள்
அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான்.
அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு.
அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று.
அந்தணர்க்குத் துணை வேதம்.
அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்.
அந்தப் பருப்பு இங்கே வேகாது.
அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும்.
அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது.
அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல,
அந்தரத்திலே விட்டு விட்டான்.
அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான்,
அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது.
அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது?