அண்ணன் பழமொழிகள் | annan Tamil Proverbs |
அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது.
அண்ணன் உண்ணாதது எல்லாம். மதனிக்கு லாபம்.
அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ?
அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு.
அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அலரஞானுக்குக் கூடப் போதாது.
அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி.
அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா: தங்கைகள் அடிகிரவணம்.,
அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே,
அண்ணன்தான் கூடப்பிறந்தான் ; அண்ணியும் கூடப் பிறந்தாளோ?
அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்?
அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம், |
அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு.
அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி: தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.
அண்ணன் பெரியவன்; அப்பா இல் (சிற்றப்பா .)
அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை.
அண்ணன் பெரியவன் ; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா,
அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன்.
அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான்,;
அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா?
அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான்,
அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா?
அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ.
அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்.
அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி. மல்லுக்குப் போனாளாம்.
அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான்.
அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலை தீர்த்துக் கொள்கிறது போல.
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல.
அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது.
அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா?
அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்.
அண்ணா நங்கை அப்ஸர ஸ்திரி.
அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்.