அண்ணாமலை பழமொழிகள் | annamalai Tamil Proverbs |
அண்ணாமலை பழமொழிகள்
அண்ணாமலைக்கு அரோ ஹரா!
அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம்,
அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?
அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை.
அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் படிக்க வேண்டுமா?
அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்,
அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது.
அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்.
அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை,
அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை.
அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்.
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் ட்டும் அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா?
அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு,
அண்ணாவுக்கு மனசு வரவேணும்; மதனி பிள்ளை பெறவேணும்.