அஞ்சு பழமொழிகள் | anju Tamil Proverbs |
அஞ்சி அஞ்சிச் சாகிறான்.
அஞ்சி ஆண்மை செய்ய வேணும்.
அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை.
அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிசை கேட்காதே.
அஞ்சி மணியம் பார்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது.
அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான்,
அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை.
அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா?
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான்.
அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது.
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்.
அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை,
அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும்.
அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே.
அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும்.
அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான் ,
அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு.
அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும்.
அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது,
அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்.
அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்?
அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி.
அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்.
அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை,
அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி.
அஞ்சு பேரல்லோ பத்தினிமா ர்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை.
அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார்.
அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்,
அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்,
அஞ்சும் இருக்கிறது நல் அதுவும் இருக்கிறது புந்திக்குள்ளே,
அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது.
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும்
அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு,
அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது. -
அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான்.
அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது.
அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி.
அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம்...
அஞ்சு வயசில் ஆதியை ஓது.
அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்.
அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும்.
அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல்.
அஞ்சு விரலும் சமமாக இருக்குமா?
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; கு அமிசி ஒரு கவளம்.
அஞ்சூரான் பஞ்சு போல.
அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும்,