அணில் பழமொழிகள் | anil Tamil Proverbs |
அணில் பழமொழிகள்
அணில் ஏற விட்ட நாய் போல.
அணில் ஏறித் தென்னை அசையுமா?
அணில் ஓட்டமும் ஆமை நடையும்,
அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே,
அணில் நொட்டிப் பனை முறியுமா?
அணில் நொட்டியா தென்னை சாயும்?
அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும்,
அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல.
அணில் வாயாற் கெட்டாற் போல.
அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம்,
அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?.