அங்காடி பழமொழிகள் | angadi Tamil Proverbs |
அங்காடி பழமொழிகள்
அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள்,
அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே.
அங்காடி விலையை அதறப் பதற அடிக்காதே.
அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே,
அங்காடி நாய் போல அலைந்து திரியாதே.
அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு.
அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம்.
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும்