அண்டை பழமொழிகள் | andai Tamil Proverbs |
அண்டங் காக்காய் குழறுகிறது போல.
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா?
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே,
அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு.
அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக் காய் எடுப்பது பாரமா?'
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம்.
அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்,
அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே.
அண்டாத .பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
அண்டை அயலைப் பார்த்துப் பேசு.
அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே.
அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல,
அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.
அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே!
அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல.
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா.
அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே?.
அண்டை வீட்டுக்காரி பீள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல.
அண்டை. வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி,
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை
அண்டைவீட்டு மீனாட்சிக்கும் அடுத்த வீட்டுக் காமாட்சிக்கும்
அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான்.