அக்காள் தமிழ்ப் பழமொழிகள் | akkal tamil proverbs |
அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன?
அக்காக்காயாகச் சுற்றுகிறான்.
அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை
என்கிறாளாம் பெண்.
அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி..
அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா?
அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்?
அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு.
அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு.
அக்காள் உறவும் மச்சான் பகையுமா?
அக்காள் செத்தாள்; மச்சான் உறவு அற்றுப் போச்சு,
அக்காள்தான் கூடப் பிறந்தாள்; மச்சானும் கூடப் பிறந்தானா?
அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான்.
(அக்காள்-மூதேவி, தங்கை-சீ தேவி. )
அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது.
அக்காள் வந்தாள்; தங்கை போனாள்.
(அக்காள்- மூதேவி, தங்கை - சீதேவி,)
அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும்.
அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம்.
அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா?
அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்?
அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள்.
தங்கை அவிசாரி ஆனாள். தனிவழி போனாளாம்.
அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு.
அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்,