அகப்பை பழமொழிகள் | Akappai Tamil Proverbs |
அகப்பை பழமொழிகள்
அகப்பை அறுசுவை அறியுமா?
அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி.
அகப்பைக்குக் கணை வாய்த்தது போல.
அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?
அகப்பைக்குத் தெரியுமா சோற்று ரூசி?
அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே,
அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான்,
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் ஆடங்கும்.
அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?