அகன்ற, அங்கடி பழமொழிகள் | agantra Tamil Proverbs |
அகன்ற, அங்கடி பழமொழிகள்
அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை.
அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை,
அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை.
அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்,
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
அகா நாக்காய்ப் பேசுகிறான்.
அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது.
அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
அகிலும் திகிலுமாக.
அகோர தபசி வபரீத சோரன்