அகம் பழமொழிகள் | Agam Tamil Proverbs |
அகம் ஏறச் சுகம் ஏறும்,
அகம் குளிர முகம் மலரும்.
அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்
அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்.
அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது.
அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்; அம்மாளுக்குச் செய்தால் அவமானம்.
அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா,
அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்.
அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்.
அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம்.
அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும்,
அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா?
அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் கிரித்ததுதான் உறைக்கிறது,
அகமூடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு.
அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்,
அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது.
அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான்.
அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும்,
அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி,
அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
அகமுடையான் செத்து அவதிப்பருகிறபோது அண்டை வீட்டுக் காரன் அக்குளைக் குத்தினானாம்.
அகமுடையான் திட்டியதைம் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்.
அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும்,
அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.
அகமுடையான் பெண்டாட்டிய ரனாலும் இடுப்பக்கில் மூணு,
அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
அகமுடையான். வேண்டும் என்ற ஆசையும். இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது.
அகமுடையான் . வைத்தைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனை திமிர்த்தச் சொன்னாளாம்,
அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்.
அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன? .
அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு.
அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை; பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை.
அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா?
அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்.
அகமுடையானைக் கொன்ற அற நீலி.
அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது ,
அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?
அகமுடையானை வைத்துக் கொண்டல்லவேர அவிசாரி ஆட வேண்டும்?