அடுப்பு பழமொழிகள் | aduppu Tamil Proverbs |
அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு.
அடுப்பங் கரையே கைலாசம்; அகமுடையானே சொர்க்க லோகம்,
அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம்.
அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம்,
அடுப்பு அடியில் பூனை தூங்க.
அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை.
அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?
அடுப்பு எரிந்தால்தானே யொரி பொரியும்?
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும்,
அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்.
அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா?
அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும்.
அடுப்புக்கு ஒரு துடுப்பா?
அடுப்புக்குத் தகுந்த உலை, அசுமுடையானுக்குத் தகுந்த
அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது.
அடுப்பு தருப்பும் போய் வாய்த் தவிடும். போச்சு,
அடுப்பே திருப்பதி; தம எட்டில் குலதெய்வம்.