அடி பழமொழிகள் | adi Tamil Proverbs |
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை.
அடி. அற்ற பனைபோல் விழுந்தான். .
அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது
அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்.
அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை,
அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டானாம்.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப் பேராம்.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர்: அருணாசலமாம்.
அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்.
அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்.
அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்? |
அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்,
அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள்,
அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்,
அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும்,
அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும்.
அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு,
அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும்.
அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம்.
அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை,
அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்ற வேண்டும்.
அடிக்கும் சரி; பிடிக்கும் சரி.
அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு,
அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல,
அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா? ,
அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில்
குதிரைச் சவாரி பண்ணினானாம்.
அடி சக்கை பொடி மட்டை
அடி சக்கை, லொட லொட்டை .
அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார்.
அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே.
அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும்.
அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
அடித்தது ஆட்டம், பிடித்தது ண்டு ப
அடித்தது ஆலங்காடு.
அடித்த நாய் உழன்றாற் போல, ன கு
அடித்த மாடு சண்டி. .
அடித்தவன் பின்னால். போனாலும் கலர் க்க வன் பின்னால் போகக்கூடாது.
அறுபதுக்குமேல் ட்ட வட டு அஞ்சிலே வளையாதது அம்பத் லே. வளையாது.
அடித்தா பால் புகட்டுகிறது?
அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது;
சொன்னால் சொல் பிறக்காது;
அடித்தால் கூட அழத் தெரியாது,
அடித்தால் முதுகில் அடி; வயிற்றில் அடிக்காதே.
அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே,
அடித்தாலும் புருஷன், அணைத்தாலும் புருஷன் .
அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு,
அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி,
அடித்தான் பிடித்தான் வியாபாரம்.
அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா?
அடித்துப் பழுத்தது பழமா?
அடித்துப் பால் புகட்டுகிறதா?.
அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான் .
அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை.
அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது,
அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்;
அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்,
அடி நொச்சி; நுனி ஆமணக்கா?
அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை.
அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்.
அடிபட்ட நாய் போல.
அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே.
அடிபட்டவன் அழுவான், 990
அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும்.
அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு.
அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்,
அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு.
அடியாத பிள்ளை படியாது.
அடியாத மாடு படியாது. ப
அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு,
அடியுண்ட வேங்கை போல.
அடியும் நுனியும் தறித்த கட்டை போல.
அடியும் பட்டுவிட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
அடியும் பிடியும் சரி.
அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான
கோபால கிருஷ்ணன்.
அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு.
அடியைப் பிடியடா பாரத பட்டா!
அடியை விட ஆவலாதி பெரியது.
அடியோடு அடிக் கரணம்,
அடிவண்டிக் கிடாப் போலே,
அடிவயிற்றில் இடி விழுந் காற் போல.
அடிவய்ற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல.
அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது.
அடிவானம் கறுத்தால் ஆண்டை வீடு வலுக்கும்,