அது பழமொழிகள் | adhu Tamil Proverbs |
அது பழமொழிகள்
அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை,
அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.
அது எல்லாம் ஐதர் காலம்.
அது எல்லாம் கிடக்கிறது ஆட்டடா பூசாரி,
அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது?
அதுக்கு இட்ட காசு தண்டம்,
அதுக்கு இட்ட காசு மினுக்கிட்டு வருவாள், அரிவாள் மணைக்குச் சுருக்கிட்டுத் தா.
அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான் .
அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம்.
அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே!
அதுவும் போதாதென்று அழலாமா இனி?