அடை பழமொழிகள் | adai Tamil Proverbs |
அடே அத்தான் அத்தான், அம்மான் பண்ணினாற் போல்டுக்க வில்லையடா,
அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம். .
அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்,
அடை தட்டின வீடு தொடை தட்டும்.
அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா.
அடைந்தோரை ஆதரி.
அடைப்பான் குற்றம், துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம்.
அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.
அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம்.
அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல,
அடை மழையும் உழவு எருதும்.
அடை மழை விட்டும் பப மழை விடவில்லை,
அடையலரை அடுத்து வெல்.
அடையா, அப்பமா, விண்டு காட்ட?
அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது.