அச்சம் பழமொழிகள் | acham Tamil Proverbs |
அங்கே போனேனோ செத்தேனோ?
அங்கேயும் தப்பி இங்கேயும் தப்பி அகப்பட்டான் தும்மட்டிக் காய்ப் பட்டன்.
அங்கை நெல்லிக்கனி,
அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்,
அச்சம் ஆண்மையைக் குறைக்கும்.
அச்சாணி அன்னதோர் சொல்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?
அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்.
அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன்.
அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தரற்போல.
அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்.
அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் ப்பட் பிறக்குமா?
அச்சு இல்லாமல் தேர் ஓடாது.
அச்சு ஒன்றா வேறா?
அசடு வழிகிறது.
அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிட ச் சமரீதிதனுக்கு .வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்.
அசந்தால் வசந்தா,
அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி.