சுட்டெழுத்துக்கள் | Suttezhuthukkal |
சுட்டெழுத்துக்கள்
1. அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் ஆகும். இவ்வெழுத்துக்கள் சொல்லின் உள்ளுறுப்பாக இடம் பெற்றுச் சுட்டுப்பொருள் தரும்பொழுது அகச்சுட்டு எனப்படும். உரம் அவ்அன் (அவன்), இவ்அன் (இவன்), உவ்அன் (உவன். இச்சுட்டு எழுத்துக்கள் பெயர்ச்சொற்களின் புறத்தே அவற்றைச் சார்ந்து நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும்பொழுது புறச்சுட்டூ எனப்படும். உ௱ம் : அவ்வீடு, இவ்வீடு, உவ்வீடு. சுட்டுவோனுக்கும் கேட்போனுக்கும் சேய்மைப் பொருளையும், “இ சுட்டுவோனுக்கு அண்மைப் பொருளையும், “உ. கேட்போனுக்கு (முன்னிலைக்கு) அண்மைப் பொருளையும் சுட்டப்பயன்படும். “அ” சுட்டு நீண்டு, ஆங்கு, ஆண்டு எனவும், “இ' சுட்ட நீண்டு ஈங்கு, ஈண்டு எனவும் “உ' சுட்டு நீண்டு ஊங்கு எனவும் வருவதும் உண்டு.