மெல்லின மெய்கள், Mellina Mei Eluthukkal- தமிழ் இலக்கணம் |
மெல்லின மெய்கள்
1. மிகுதி மெய்களுள் ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம். க் இற்கு ங், ச் இற்கு ஞ், ட் இற்கு ண், த் இற்கு ந், ப் இற்கு ம், ற் இற்கு ன், இன மெல்லெழுத்துக்களாம். இச் சோடி எழுத்துக்கள் ஒலிக்கப்படும் பொழுது வாயுறுப்புக்களின் தொழிற்பாடு ஒரே விதமாயமைதல் குறித்தே இனங்களாயமைந்தன. உள்நின்று எழுப்பப்படும் காற்றானது நெஞ்சைப் பொருந்தி வரும் பொழுது வல்லினமாகவும், மூக்கைப் பொருந்தி வரும் பொழுது மெல்லினமாகவும் ஒலிகள் வேறுபடுகின்றன. நீங்களும் ஒலித்துப் பார்த்தால் உண்மை தெளிவாகும்