திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாயிரம் - 6 | Thirumanthiram Payiram - 6 |
கடவுள் வாழ்த்து பாயிரம் - 6
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
விளக்கம்:
- அவனை ஒழிய அமரரும் இல்லை - அவனைத் தவிர்த்து தேவர்களும் இல்லை.
- அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை - அவனின்றி செய்யப்படும் தபசும் இல்லை.
- அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை - அவனின்றி மூவரால் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) செய்வது ஒன்றும் இல்லை.
- அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே - அவனின்றி ஒரு ஊருக்குள் செல்வது கூட அறியேன்.