அவர்வயின் விதும்பல் 1261-1270 | Thirukkural, திருக்குறள் 1261-1270 |
Thirukkural, திருக்குறள் 1261-1270 :-
அவர்வயின் விதும்பல் |
|
1261 |
வாள் அற்றுப் புற்கென்ற, கண்ணும்; அவர் சென்ற |
|
நாள் ஒற்றித் தேய்ந்த, விரல். |
|
|
1262 |
இலங்கிழாய்! இன்று மறப்பின், என் தோள்மேல் |
|
கலம் கழியும், காரிகை நீத்து. |
|
|
1263 |
உரன் நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் |
|
வரல் நசைஇ, இன்னும் உளேன். |
|
|
1264 |
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி, |
|
கோடு கொடு ஏறும், என் நெஞ்சு. |
|
|
1265 |
காண்கமன், கொண்கனைக் கண் ஆர; கண்டபின், |
|
நீங்கும், என் மென் தோட் பசப்பு. |
|
|
1266 |
வருகமன், கொண்கன் ஒருநாள்; பருகுவன், |
|
பைதல்நோய் எல்லாம் கெட. |
|
|
1267 |
புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ-கலப்பேன்கொல்- |
|
கண் அன்ன கேளிர் வரின்?. |
|
|
1268 |
வினை கலந்து வென்றீக, வேந்தன்! மனை கலந்து |
|
மாலை அயர்கம், விருந்து!. |
|
|
1269 |
ஒரு நாள் எழு நாள்போல் செல்லும்-சேண் சென்றார் |
|
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு. |
|
|
1270 |
பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்- |
|
உள்ளம் உடைந்து உக்கக்கால்?. |